தருமபுரி: தமிழ் குமரன், பாமகவின் கொடி பெயரை பயன்படுத்த கூடாது என தருமபுரி எஸ்பி அலுவலகத்தில் அன்புமணி பிரிவு இளைஞர் அணி மாநில செயலாளர் மனு.
பாட்டாளி மக்கள் கட்சி கடந்த சில மாதங்களாக மருத்துவர் ராமதாஸ் தலைமையில் ஒரு பிரிவும், மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் ஒரு பிரிவாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இரண்டு பிரிவிலும் பொறுப்பாளர்களை நியமித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவராக ஜி.கே.எம்.தமிழ்குமரனை நியமனம் செய்து அறிவிப்பு வெளியிட்டார். ஆனால் அதே பொறுப்பிற்கு அன்புமணி