திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட நாடார் மகாஜன சங்கம் சார்பாக புகார் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜர் அவர்களைப் பற்றியும் அவரது சமுதாயத்தினரையும் "மைஇந்தியா" youtube சேனல் நெறியாளர் முக்தார் அகமது மரியாதை குறைவாகவும் தவறாகவும் பேசியிருப்பது பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தி, கலகம் ஏற்படுத்தும் விதமாக உள்ளது எனவே நெறியாளர் முக்தார் அகமது மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது