திருச்செந்தூர்: குலசேகரன் பட்டினம் வட மாநில ஒப்பந்தக்காரர் கொலை உடன்குடி அனல் மின் நிலையம் முன்பு தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்
திருச்செந்தூர் அருகே உடன்குடியில் 660 மெகா வாட் திறன் கொண்ட அனல் மின் நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் சுமார் 3000 வட மாநில தொழிலாளர்கள் ஒப்பந்த பணியில் பணி செய்து வருகின்றனர். இதில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அர்ஜுன் பிரசாத் (53). என்பவர் ஒப்பந்ததாரராக இருந்து வருகிறார். இவர் ஞாயிற்றுக்கிழமை இரவு குலசேகரன் பட்டினம் அரசு மதுபான கடை பின்புறம் கழுத்தை நெரித்து கொலை உடல் பாதி எரிந்த நிலையில் கிடந்தது.