திருப்புவனம்: நிகிதா புகார் தொடர்பாக ஐந்து நபர்களிடம் சிபிஐ அதிகாரிகள் மடப்புரம் பகுதிகளில் 3 மணி நேரம் விசாரணை
சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தைச் சேர்ந்த காவலாளி அஜித் குமார் கொலை வழக்கு தமிழகமெங்கும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஐந்து காவலர்கள் சிறையில் உள்ளனர். கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி இந்த வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிகையை சென்னை கிளை மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.