சோழிங்கநல்லூர்: பாலவாக்கம் மணியம்மை தெருவில் 183 வது வார்டில் மழை நேரத்தில் பொதுமக்கள் பேச்சை மீறி ஒப்பந்ததாரர் சாலை அமைத்ததால் மழையில் கரைந்து போன சாலை
பாலவாக்கம் மணியம்மை தெருவில் 14 வது மண்டலம் 183 வது வட்டத்தில் சீனி மாநகராட்சி ஒப்பந்தக்காரர்கள் மழை வரும் என்று சென்னை வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில் சிமென்ட் சாலை போட்டதால் சாலை சேரும் சகதியும் ஆக மாறி வாகன ஓட்டிகள் வழுக்கி விடும் நிலையில் இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம் தெரிவித்தனர். மேலும் தங்களது வரிப்பணம் வீணாகப் போவதாகவும் குற்றம் சாட்டினர்