திருச்செந்தூர்: ஆறுமுகநேரி போலீசார் சோதனை சாவடி அருகே கோவில் பூசாரி கொடூரமாக வெட்டிக்கொலை பரபரப்பு
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி பெருமாள்புரத்தை சேர்ந்தவர் முருகேசன்(54). இவர் ஆறுமுகநேரி போலீசார் சோதனை சாவடி அருகே சாலை ஓரத்தில் உள்ள சுடலை மாட சுவாமி கோவிலில் பூசாரியாக பணியாற்றி வருகிறார். இன்று வழக்கம்போல காலையில் கோவிலுக்கு முருகேசன் வந்துள்ளார். ஆறுமுகநேரி பகுதியில் மின்தடை ஏற்பட்டுள்ளது. எனவே கோவில் முன்புள்ள மரத்தடி நிழலில் ஓய்வு எடுத்துள்ளார்.