புகளூர்: க.பரமத்தி கடைவீதியில் பாஜக வேட்பாளர் செந்தில்நாதனுக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு
Pugalur, Karur | Apr 3, 2024 தேசிய ஜனநாயக கூட்டணி கரூர் பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளராக வி.வி. செந்தில்நாதன் போட்டியிடுகிறார். அவர் தன் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்கு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் புகலூர் வட்டம், க.பரமத்தி கடைவீதியில் தாமரைச் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். இந்நிகழ்ச்சியில் பாட்டாளி மக்கள் கட்சியின் கரூர் மாவட்ட செயலாளர் புகழூர் சுரேஷ், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கரூர் மாவட்ட செயலாளர் தங்கவேல் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர். முன்னதாக பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.