விளாத்திகுளம்: சூரங்குடி காவல் நிலைய போக்சோ வழக்கில் சம்பந்தப்பட்டவருக்கு ஆயுள் தண்டனை மகிளா நீதிமன்றம் தீர்ப்பு
சூரங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2024ம் ஆண்டு 8 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் விளாத்திகுளம் வேம்பார் பகுதியைச் சேர்ந்த அந்தோணிராபர்ட் கென்னடி மகன் தாமஸ் அற்புத ரகசியம் என்பவரை சூரங்குடி காவல் நிலைய போலீசார் போக்சோ மற்றும் கொலை குற்றத்திற்கான சட்டப்பிரிவின் கீழ் கைது செய்தனர். இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.