வேடசந்தூர்: ஆத்துமேட்டில் ஐயப்ப சாமி ரத ஊர்வலம்
வேடசந்தூரில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கார்த்திகை ஒன்றாம் தேதி மாலை அணிந்து கொண்டனர். சபரிமலை ஐயப்பன் 46 ஆம் ஆண்டு மண்டல பூஜை ரத ஊர்வலம் நடைபெற்றது. செண்டை மேளம் முழங்க வானவெடிகள் வெடித்துக்கொண்டு ஆர்ச் காலனி விநாயகர் கோவில் முன்பாக தொடங்கிய ஊர்வலம் வேடசந்தூர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து மீண்டும் கோவிலை சென்றடைந்தது. குருசாமி செல்வராஜ் தலைமையில் கோவில் நிர்வாக தலைவர் வக்கீல் ரங்கராஜ், செயலாளர் அறிய பித்தம்பட்டி குப்புசாமி, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.