குந்துகால் கடற்கரையில் கடலுக்கு நடுவே அமைந்துள்ள குருசடை தீவுக்கு சுற்றுலா பயணிகளை அழைத்துச் செல்வதற்காக வனத்துறை சார்பில் சுற்றுலா படகு சேவையை ஆய்வு செய்த அமைச்சர் ராஜகண்ணப்பன் சுற்றுலா படகுகள் பராமரிப்பு மற்றும் கண்ணாடி இழை படகுகளின் செயல்பாடுகள் குறித்து வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். குந்துகால் கடலை பார்த்த அமைச்சர் “VERY BEAUTIFUL BEACH” என கூறியவாறு கடலின் அழகை ரசித்தார். தனுஷ்கோடி அடுத்த முகுந்தராயர் சத்திரத்தில் பறவைகள் கண்காணிப்பு மேடையை பார்வையிட்டார்