தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட லட்சுமிபுரம் கிராமத்தில் உள்ள நியாய விலை கடை திறப்பு விழா நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக விளாத்திகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜீவி மார்க்கண்டேயர் கலந்து கொண்டு திறந்து வைத்தார் தொடர்ந்து அரிசி தரமான முறையில் விநியோகம் செய்யப்படுகிறதா என்று ஆய்வு மேற்கொண்டார் மேலும் தரமான அரிசியை வழங்க ரேஷன் கடை ஊழியர்களுக்கு உத்தரவிட்டார்