சிவகங்கை: 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – கட்டிட தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனைவிதித்து மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் தீர்ப்பு
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வைரவபுரத்தைச் சேர்ந்த பாண்டி (38), டைல்ஸ் ஒட்டும் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். கடந்த ஜனவரி மாதம் கல்லலில் உள்ள ஒரு வீட்டில் டைல்ஸ் ஒட்டச் சென்றிருந்தார். அப்போது, மதிய நேரத்தில் அந்த வீட்டில் இருந்த 17 வயது சிறுமி ஒருவர் படுக்கையறையில் தூங்கிக் கொண்டிருந்தார். இதைக் கண்ட பாண்டி, அறைக்குள் புகுந்து சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார்.