இளையாங்குடி: சாலைக்கிராமத்தில் மத நல்லிணக்கத்தின் எடுத்துக்காட்டு – கும்பாபிஷேக விழாவில் முஸ்லிம் சமூகத்தினர் வீடியோ வைரல்#viralvideo
சிவகங்கை மாவட்டம் சாலைக்கிராமத்தில் மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் மகிழ்ச்சிகரமான நிகழ்வு நேற்று நடைபெற்றது. அங்குள்ள செல்வவிநாயகர் மற்றும் முத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற திருப்பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. கணபதி ஹோமம், சப்தகன்னிகை பூஜை உள்ளிட்ட யாகசாலை பூஜைகளுக்குப் பின், சிவாச்சாரியார்கள் புனித நீரை ஊர்வலமாக கொண்டு சென்று கோபுர கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர்.