தருமபுரி: தருமபுரி ஒன்றியம், ஆண்டிஹள்ளி பஞ்சாயத்து அலுவலகத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகம் கலெக்டர் சதீஷ் பார்வையிட்டார்.
தருமபுரி ஒன்றியம், ஆண்டிஹள்ளி பஞ்சாயத்து அலுவலகத்தில் நடைபெற்ற அரசுத் துறைகளின் சேவைகளை, மக்களின் இல்லங்களுக்கே சென்று வழங்கும் ”உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமில் நலத்திட்ட உதவிகள் வேண்டி விண்ணப்பித்த பயனாளிகளின் மனுவின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, உடனடியாக பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ்,இ.ஆ.ப., அவர்கள் இன்று இரண்டு மணி அளவில் வழங்கினார்கள்