அரியலூர்: விஜயின் குற்றச்சாட்டுகளுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பதிலடி- இயக்குனர்கள் எழுதிக் கொடுப்பதையே பேசுகிறார் என அரியலூரில் பேட்டி
தமிழக போக்குவரத்து மற்றும் மின்சார துறை அமைச்சர் சிவசங்கர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்கூறும்போது போக்குவரத்து துறை அமைச்சரின் அரியலூர் மாவட்டத்திலேயே பேருந்து வசதி இல்லை என தமிழக வெற்றி கழக தலைவர் விஜயின் குற்றச்சாட்டு குறித்து கேட்டபோது, அரியலூர்- பெரம்பலூர் மாவட்டத்தில் 200 வழித்தடங்களுக்கு மேல் பேருந்துகள் இயக்கப்படுகிறது எனவும், இயக்குனர்கள் எழுதிக் கொடுப்பதையே விஜய் பேசுகிறார் என விமர்சனம்.