கும்பகோணம்: அதிமுக - காங்கிரஸ் உறுப்பினர்கள் ரகசிய கூட்டு: கும்பகோணம் மாநகராட்சி துணை மேயர் கூறியதால் சலசலப்பு
தஞ்சாவூர் மாவட்டம் மூல மாநகராட்சி மன்ற கூட்டம் இன்று காலை நடந்தது. இதில் அதிமுக கவுன்சிலர் தரைக்கலை வியாபாரிகள் குறித்து கோரிக்கை விடுத்தி பேசினார். அப்போது காங்கிரஸ் உறுப்பினர் ஐயப்பன் அதே கோரிக்கையை நான் பேச இருந்தேன் என கூறியதை அடுத்து, துணை மேயர் சு.ப.தமிழழகன் அதிமுக காங்கிரஸ் உறுப்பினர்கள் ரகசிய கூட்டு வைத்துள்ளார்களா. பல கூட்டத்திலும் அவர் பேசுவதையே இவரும் ஆதரித்து பேசுகிறார் எனக் கேட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.