காரைக்குடி: KMC காலனி பகுதியில் பன்னி வளர்ப்பு தகராறு – இளைஞருக்கு அரிவாள் வெட்டு,
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி KMC காலனி பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (20). இவருக்கும் சத்யா நகர் பகுதி இளைஞர்களுக்கும் பன்னி வளர்ப்பு தொடர்பாக தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று மாலை காரைக்குடி உதயம் நகர் பகுதியில் நடந்து சென்ற சுரேஷ்குமாரை, 5 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து அருவாளால் வெட்டியது. பின்னர், இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்று தலைமறைவாகினர்.