சிவகங்கை: சொத்து தகராறு – மைத்துனரை வெட்டி கொலை செய்த 3 பேருக்கு மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு
மதுரை மாவட்டம் பாப்பாங்குளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மாயக்கண்ணன் (32). இவரது மனைவி அன்னமணியின் சகோதரர் அய்யனார் (அன்பு சேட் - 32) உடன் சொத்து தொடர்பான முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில், 2010 ஆம் ஆண்டு மே மாதம் கொந்தகை கிராமத்தில் நடைபெற்ற திருவிழாவில் கலந்து கொண்ட மாயக்கண்ணனை, அய்யனார் தனது நண்பர்கள் ராஜேந்திரன் (35), ராமர் (30) ஆகியோருடன் சேர்ந்து வழிமறித்து வெட்டி கொலை செய்தார்.