வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.காந்திராஜன் மாரம்பாடி மற்றும் குட்டம், தேவி நாயக்கன்பட்டி, வாணிக்கரை போன்ற நியாய விலை கடைகளில் பொங்கல் தொகுப்பு ரூபாய் 3000 பணம், கரும்பு, சேலை, வேஷ்டி, அரிசி போன்ற பொருட்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சார்பதிவாளர் மருதமுத்து, செயலாளர்கள் சண்முகவேல், பெரியசாமி, மாரம்பாடி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரோசாரியோ, திமுக தெற்கு ஒன்றிய அவை தலைவர் ஆரோன், மாவட்ட சிறுபான்மையினர் பிரிவு துணை அமைப்பாளர் வின்சென்ட், தேவசகாயம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.