தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டை வீரா கோட்டை தெருவில் நண்பர்கள் சந்திக்க வந்த வாலிபரின் இருசக்கர வாகனம் திருட்டு தந்தையுடன் காவல் நிலையத்தில் புகார்
தண்டையார்பேட்டை வீரா குட்டி தெருவில் ஹரிகரன் நண்பர்களை சந்திக்க இருசக்கர வாகனத்தில் சென்று நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருந்துவிட்டு கிளம்பும்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் ஹரிஹரனை கத்தியை காட்டி மிரட்டி இரு சக்கர வாகனத்தை ஓட்ட சொல்லியுள்ளார் ஹரிஹரனும் வாலிபர் பின்னால் அமர வைத்து சிறிது தூரம் சென்ற பிறகு ஹரிஹரனை இறக்கிவிட்டு அந்த வாலிபர் இரு சக்கர வாகனத்துடன் தப்பி ஓடியுள்ளார் இது தொடர்பாக தந்தையுடன் தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் ஹரிஹரன் புகார் அளித்துள்ளார்