தஞ்சாவூர்: பரபரப்பானது கவிச்சந்து... தஞ்சை மேல வீதியில் ஒரு வீட்டில் இருந்து மூன்று ஜோடி மான் கொம்புகளை அதிரடியாக பறிமுதல் செய்த வனத்துறை அதிகாரிகள்
தஞ்சாவூர் மேலவீதி கவிச்சந்தில் ஒரு வீட்டில் சட்ட விரோதமாக வைத்திருந்த மூன்று ஜோடி மான் கொம்புகளை இன்று வனத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து மான் கொம்புகளை வைத்திருந்ததாக சகோதரர்கள் பிரபாகரன், சுதாகரன் ஆகிய மீது வழக்கு பதிவு செய்து மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர். இந்த சம்பவம் தஞ்சாவூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.