திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியில் உள்ள தொப்பம்பட்டி மேற்கு ஒன்றிய துணை செயலாளர் தண்டபாணி இல்ல திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக புதன்கிழமை வந்த அமமுக பொதுச் செயலாளர் டி டி வி தினகரன், ஒட்டன்சத்திரம் அமமுக கட்சி அலுவலகத்தில் இரவு செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது 4 முனைப் போட்டி உள்ளது. நீங்கள் எதிர்பார்க்காத திருப்பங்கள் ஏற்பட்டு புதிதாக கூட்டணி அமைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. அது குறித்து சில நகர்வுகள் நடந்து கொண்டிருக்கிறது என்பது எனக்குத் தெரியும். என தெரிவித்தார்