வேப்பூர்: செல்லியம்பாளையம் கிராமத்தில் தூங்கிக்கொண்டு இருந்த சத்துணவு பொருப்பாளரின் 10 பவுன் தாலி செயின் பறிப்பு
வேப்பூர் அடுத்த செல்லியம்பாளையம் சேர்ந்தவர் பூங்கொடி சத்துணவு பொறுப்பாளர். இவரது கணவர் அரசு பேருந்து ஓட்டுநர் ஆவார். இவர் பணிக்கு சென்ற நிலையில், அதிகாலை 3 மணியளவில் மர்ம நபர் வீட்டிற்குள் புகுந்த தூங்கிக்கொண்டிருந்த பூங்கொடியின் 10 பவுன் தாலி கொடியை பறிக்க முயன்றார். அதை தடுக்க முயன்ற பூங்கொடியை கட்டையால் தாக்கி நகை பறித்து சென்றார். இது குறித்து வேப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடிவருகின்றனர்.