தஞ்சாவூர்: ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரமாக்க வேண்டும் ... தஞ்சாவூரில் மின்வாரிய தொழிலாளர்கள் திடீர் சாலை மறியல்
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணிபுரி ஒப்பந்த தொழிலாளர்களை கணக்கெடுத்து அவர்களுக்கு தினக்கூலியை நிர்வாகமே வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தஞ்சாவூர் மணிமண்டபம் அருகில் இன்று காலை மின்வாரிய தொழிலாளர்கள் திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர் இந்த சாலை மறியலால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது