கோவில்பட்டி: மாதாங் கோவில் சாலையில் இருசக்கர வாகனத்தில் தீ விபத்து
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மந்திதோப்பு சாலை பகுதியில் ஒர்க்ஷாப் நடத்தி வருபவர் ராஜா. இவர் ஒர்க்ஷாப்புக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக இருசக்கர வாகனத்தில் மாதாங் கோவில் சாலையில் உள்ள கடைக்கு முன் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு உள்ளே சென்றுள்ளார். திடீரென அவரது இருசக்கர வாகனம் தீப்பிடித்து எறிய துவங்கியது உடனடியாக அருகில் இருந்த வாருகாலில் தண்ணீரை எடுத்து ராஜா தீயை கட்டுப்படுத்தினார் இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.