கோவில்பட்டி: செண்பகவல்லி அம்மன் கோவிலில் கார்த்திகை மாத சோமவார விழாவை முன்னிட்டு பால்குட ஊர்வலம்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனார் சுவாமி திருக்கோவிலில் கார்த்திகை சோமவார விழாவை முன்னிட்டு யோகேஸ்வரர் சங்கம் சார்பில் 83 வது ஆண்டு மண்டப படி திருவிழாவாக பால்குட ஊர்வலம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் 1008 பேர் பால் குடங்களை தலையில் சுமந்தவாறு ஊர்வலமாக நகரின் முக்கிய வீதிகள் வழியாக எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். இந்த ஊர்வலத்தை சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.