திருவொற்றியூர்: திருவெற்றியூர் எண்ணூர் ராமகிருஷ்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் புயல் காரணமாக போலீஸ் பாதுகாப்பையும் மீறி கடற்கரையில் செல்பி எடுத்த பொதுமக்கள்
திருவொற்றியூர்,எண்ணூர் ராமகிருஷ்ணா நகர் உள்ளிட்ட கடற்கரை பகுதியில் டிட்வா புயல் காரணமாக ஒரு சில இடங்களில் காவல்துறை பாதுகாப்பு அமைக்கப்பட்டு பொதுமக்களை தடுத்து வருகின்றனர் இந்நிலையில் காவல்துறை பாதுகாப்பையும் மீறி திருவொற்றியூர் அருகே சிறிய குழந்தையுடன் கடலில் இறங்கி செல்போனில் புகைப்படம் மற்றும் ரீல்ஸ் செய்த தம்பதியரின் வீடியோ வைரலாகி வருகிறது மேலும் காவல்துறை நடவடிக்கை எடுக்க மீனவர்கள் கோரிக்கை.