திராவிட தமிழர் கட்சி மாநில துணைப் பொதுச் செயலாளர் செங்கொடி தலைமையிலானோர் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது புகார் அளித்தனர். அந்த புகாரில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், பெரியாரைப் பற்றி பல்வேறு பொய்யான செய்திகளை பேசியும் பெரியாரின் பேச்சை மடைமாற்றம் செய்தும் பெரியாரை இழிவு படுத்தியுள்ளார் எனவே சமூகத்தில் நிலவும் அமைதியை சீர்குலைக்கும் எண்ணத்தோடும் பெரியாரை இழிவுபடுத்தி பேசி வரும் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்