திருவையாறு: ஆற்றுக் கரையில் குவிந்த மக்கள் வெள்ளம்... மஹாளய அமாவாசையை ஒட்டி திருவையாறில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர்
மஹாளய அமாவாசையை ஒட்டி தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு புஷ்ப மண்டபத்துறையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்து தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனர். இதனால் திருவையாறு முழுவதும் திரும்பும் பகுதி எல்லாம் பொது மக்களின் கும்பல் காணப்பட்டதால் மனித வெள்ளம் போல் காட்சியளித்தது.