வேடசந்தூர் அருகே உள்ள லட்சுமணன் பட்டி பகுதியில் திண்டுக்கல் புவியியல் மற்றும் சுரங்கத் துறை உதவி இயக்குனர் கிருஷ்ணமோகன் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்பொழுது கிராவல் மண் ஏற்றி வந்த லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். லாரியில் எட்டு யூனிட் கிராவல் மண் இருந்தது. மண் கொண்டு செல்வதற்காக டிரைவரிடம் எந்த ஆவணமும் இல்லாதது தெரிய வந்தது. இதனை அடுத்து அதிகாரிகள் லாரியை, கிராவல் மண்ணுடன் கைப்பற்றி வேடசந்தூர் போலீசில் ஒப்படைத்தனர். சப்-இன்ஸ்பெக்டர் தர்மர் விசாரணை.