தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அனைத்து ஓய்வுதியர்கள் சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் தங்கவேல் தலைமையில், நூற்றுக்கும் மேற்பட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அனைத்து ஓய்வுதியர்கள் சங்கத்தினர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஓய்வூதியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை விசாரணையை விரைவாக முடித்து விட வேண்டும் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.