திண்டுக்கல் கிழக்கு: 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லறை மேடு அருகே ஜாக்டோ ஜியோ அமைப்பினர் உரிமை மீட்பு உண்ணாவிரதப் போராட்டம்
திண்டுக்கல்திருச்சி சாலை கல்லறை மேடு பகுதியில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தமிழக முதலமைச்சர் அவர்களின் 2021 தேர்தல் கால வாக்குறுதியின் படி பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்திட கோரியும். 01.04.2003 பிறகு அரசு பணியில் சேர்ந்தவர்கள் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதிய திட்டங்களை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும். உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ இயக்கத்தை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உரிமை மீட்பு உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்