தூத்துக்குடி: அறிஞர் அண்ணாவின் 117-வது பிறந்த நாள் திமுக சார்பில் தமிழ்ச்சாலை ரோட்டில் அவரது சிலைக்கு அமைச்சர் அனிதா ஆர்.ராதா கிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை
திமுகவை தோற்றுவித்தவரும், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான பேரறிஞர் அண்ணாவின் 117-வது பிறந்தநாள் இன்று செப்டம்பர் 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் தூத்துக்குடி, தமிழ்ச் சாலை ரோட்டில் உள்ள காய்கனி மார்க்கெட் சந்திப்பில் பேரறிஞர் அண்ணாவின் முழு உருவச் சிலைக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.