கே.வி.குப்பம்: கடலூரை போன்று உயிர்பலி ஏற்படும் வரை காத்திருப்பீர்களா லத்தேரியில் ரயில்வே மேம்பாலம் அமைக்க கோரிக்கை #localissue
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி கிராமத்தில் எல்சி 57 ரயில்வே கேட் தொடர்ந்து மூடப்படுவதால் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கடுமையான பாதிப்பு இந்த பகுதியில் மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை அமைத்து தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை கடலூரை போன்று உயிர் பலி ஏற்படும் முன் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? நடவடிக்கை எடுக்காவிடில் வரும் சட்டமன்றத் தேர்தலை புறக்கணிப்போம் கொதித்து எழுந்த லத்தேரி மக்கள்