வேடசந்துார் தாலுகா வடமதுரை ஒன்றியம் வேல்வார்கோட்டையில் வேடசந்துார் வீரா சாமிநாதன் அறக்கட்டளை, திண்டுக்கல் கே.டி.மருத்துவமனை இணைந்து பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. தி.மு.க., ஒன்றிய செயலாளர் சுப்பையன் தலைமை வகித்தார். அறக்கட்டளை நிறுவனர் வீரா சாமிநாதன் முகாமை துவக்கி வைத்தார். டாக்டர் துரை தலைமையிலான குழுவினர் சிகிச்சை அளித்தனர். தி.மு.க., ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கே.பி.சிவா, துணை அமைப்பாளர் முத்துக்குமார், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பிரிவு அமைப்பாளர் சுப்புராமன், தி.மு.க., நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.