தூத்துக்குடி மாவட்டம் காயா மொழி அருகே உள்ள தேரிகுடியிருப்பு கற்குவேல் அய்யனார் திருக்கோவிலில் கார்த்திகை 28 வது கள்ளர் வெட்டு பெருந்திருவிழாவை முன்னிட்டு மாலையம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் அம்மனுக்கு பல்வேறு வகையான அபிஷேக அலங்கார தீபாராதனைகள் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.