குஜிலியம்பாறை தாலுகா ஆலம்பட்டி ஊராட்சி காடம நாயக்கனூரை சேர்ந்த டிரைவர் வினோத் (வயது 22). இவர் ஒரு காரில் ஆர்.வெள்ளோடு சென்று மளிகை கடையில் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொண்டு மீண்டும் தனது ஊரை நோக்கி சென்று கொண்டிருந்தார். கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து காடமனநாயக்கனூர் பகுதியில் சென்ற பொழுது தலை குப்புற கவிழ்ந்து விபத்துள்ளானது. இதில் படுகாயம் அடைந்த வினோத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து குஜிலியம்பாறை சப்-இன்ஸ்பெக்டர் விஜயலிங்கம் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.