காஞ்சிபுரம் மாவட்டம் ஶ்ரீபெரும்புதூர் அடுத்த வல்லக்கோட்டையில் புகழ்பெற்ற அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இத்திருக்கோயில் அருணகிரிநாதரால் எட்டு திருப்புகழ் பாடப்பெற்ற தலமாகும். பழமையான இத்திருக்கோயிலில் கிருத்திகை, விசாகம், சஷ்டி நாட்களிலும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளிலும் வந்து வழிபடுவோருக்கு புதிய வீடு கட்டுதல், திருமணம், பதவி உயர்வு, வளமான வாழ்வு கிடைப்பதாக ஐதீகம்