பேராவூரணி: சத்துணவு அமைப்பாளர் மர்ம மரணம், கணவர் மீது சந்தேகம் இருப்பதாக பெரிய தெற்கு காடு அருகே உறவினர்கள் சாலை மறியல்
பேராவூரணி அருகே உள்ள ஒட்டங்காடு பகுதியைச் சேர்ந்த ராமமூர்த்தி (வயது45), டிரைவர். இவரது மனைவி கற்பகசுந்தரி (வயது 32), இவர் ஒட்டங்காடு அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு 8ஆம் வகுப்பு மற்றும் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மகள்கள் உள்ளன இந்நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாய் தகராறில் மனைவி இறந்து கிடந்ததாக கூறப்படுகிறது கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்