திருவாரூர்: வலங்கயம் ஊராட்சியில் 200 மீட்டர் ‘தீண்டாமை சுவர்' எழுப்பப்பட்டதால் அவதி
திருவாரூர் மாவட்டம் வலங்கயம் ஊராட்சியில் 200 மீட்டருக்கு ‘தீண்டாமை சுவர்' எழுப்பப்பட்டதால், அங்கு வசிக்கும் பட்டியலின குடும்பங்கள் அத்தியாவசியமான இடங்களுக்குச் செல்லமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது. இச்சுவரால் 1000-கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இந்த சாதி ஒடுக்குமுறைக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளித்துள்ளனர்