கோவை பீளமேட்டில் உள்ள பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான பயிற்சி திட்டம் 2வது நாளாக கல்லூரி வளாகத்தில் இன்று மதியம் நடைபெற்றது. கல்லூரி துறை தலைவர் டாக்டர் எல். கோபாலகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்றார். கல்லூரி முதல்வர் டாக்டர் டி.பிருந்தா தலைமை உரையாற்றினார். கல்லூரி செயலாளர் டி.கண்ணையன் வாழ்த்துரை வழங்கினார். கோவை மாநகர போலீஸ் கமிஷனர் வி.பாலகிருஷ்ணன் மாணவர்களிடையே பேசினார்.