அரியலூர்: த.வெ.க கூட்டத்தில் வழி தவறி நின்று அழுது கொண்டிருந்த குழந்தை- காவல்துறையினர் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த சம்பவம்
அரியலூர் அண்ணா சிலை அருகே நேற்று தமிழக வெற்றி கழகத்தின் பிரச்சாரம் நடைபெற்றது. முன்னதாக கூட்டம் துவங்குவதற்கு முன்பு 03 வயது குழந்தை ஒன்று, வழி தவறி நின்று அழுது கொண்டிருந்தது இதனைக் கண்ட அரியலூர் மாவட்ட தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் இளையபெருமாள், அந்த குழந்தையை மீட்டு அரியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் அழைத்து சென்றார். பின்னர் அந்த குழந்தையின் தாயார், பாட்டியிடம் குழந்தை ஒப்படைப்பு.