66-வது குடிரரசு தின விழாவை முன்னிட்டு பள்ளி கல்வித்துறை சார்பாக திருச்சி மாவட்டம், தொட்டியத்தில் கொங்குநாடு பொறியியல் கல்லூரியில் 17 வயதிற்குட்பட்ட சீனியர் மாணவர்களுக்கான மாநில அளவிலான ஹேண்ட் பால் போட்டிகள் நடைபெற்றது. இதில் சேரன் பள்ளி ஹேண்ட் பால் வீரர்கள் தென்காசி இராணிப்பேட்டை திருவண்ணாமலை மயிலாடுதுறை விழுப்புரம் ஆகிய அணிகளுடன் மோதி வெற்றி பெற்று இறுதி போட்டியில் சேலம் அணியுடன் மோதி 20-க்கு 15 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்று மாநில அளவில் முதல்பரிசான தங்கப் பதக்கத்தை வென்றது