பொன்னமராவதி: ஆடி வாஸ்து நாளை முன்னிட்டு செவலூர் பூமிநாதர் கோவிலில், பூஜை செய்யப்பட்ட செங்கலை வாங்க குவிந்த பக்தர்கள்
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாலுகா செவலூர் கிராமத்தில் அமைந்துள்ள பூமிநாதர் ஆலயம் சிறந்த வாஸ்து ஆலயமாக கருதப்படுகிறது. இன்று ஆடி வாஸ்து நாளை முன்னிட்டு தமிழகத்திலிருந்து ஏராளமான பக்தர்கள் ஆலயத்தில் நடந்த சிறப்பு யாகத்தில் பங்கேற்று வீடு கட்ட பூஜை செய்யப்பட்ட செங்கல் கற்களை நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கிச் சென்றனர்.