தஞ்சாவூர்: அடிக்க ஆரம்பித்து விட்டார்கள் என்று உடைந்து விடாதே... போர்க்களத்தில் இறங்கி விட்டோம் வெற்றிவாகை சூட : தஞ்சையில் தவெக நிர்வாகிகள் ஒட்டியுள்ள போஸ்டர்
தஞ்சாவூரில் தவெக தலைவர் விஜய்க்கு ஆதரவாக அக்கட்சி நிர்வாகிகள் ஒட்டி உள்ள போஸ்டர் அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்தப் போஸ்டரில் அடிக்க ஆரம்பித்து விட்டார்கள் என உடைந்து விடாதே போர்க்களத்தில் இறங்கி விட்டோம் வெற்றிவாகை சூடுவதற்கு உண்மை ஒருநாள் வெல்லும் என வாசகங்கள் அமைந்துள்ளன.