தூத்துக்குடி: தீபாவளி பண்டிகை முன்னிட்டு ஜவுளி கடையில் இறுதி கட்ட விற்பனை பொதுமக்கள் கூட்டம் தமிழ்ச் சாலை ரோட்டில் அலைமோதியது
தீபாவளி பண்டிகை நாளை திங்கள்கிழமை கொண்டாடப்படுவதை முன்னிட்டு தூத்துக்குடியில் ஜவுளி வியாபாரம் இறுதி கட்ட வியாபாரம் களை கட்டியுள்ளது. குறிப்பாக தீபாவளி திருநாளில் புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து பலகாரங்களுடன் தீபாவளி கொண்டாடுவது வழக்கம். தீபாவளி திருநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாநகரில் தமிழ் சாலை ரோட்டில் உள்ள ஜவுளி கடைகளில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்து வருகிறது.