காளையார்கோவில்: புளியடித்தம்பத்தில் மதுப் பாட்டிலை தட்டி விட்டதால் பீர் பாட்டிலால் தாக்குதல் – ஒருவர் கைது
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே உள்ள புளியடித்தம்பம் பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் மதுவை தட்டி விட்டதால் ஏற்பட்ட தகராறு தாக்குதலாக மாறி பரபரப்பை ஏற்படுத்தியது. வாகைக்குடி பகுதியைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் (27), பாரில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது, திட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த சரத்குமார், ஸ்ரீகாந்தின் மதுப் பாட்டிலை தட்டி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.