தூத்துக்குடி: தீபாவளி முன்னிட்டு காமாட்சி அம்மன் கோவில் தெருவில் வீடுகளின் முன்பு அகல் விளக்கு ஏற்றி கொண்டாட்டம்
தீபாவளி பண்டிகை இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தூத்துக்குடியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று காலை வீடுகளின் முன்பு பொதுமக்கள் தீபாவளி திருநாளை வரவேற்கும் வகையில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அகல் விளக்கை ஏற்றி வழிபட்டனர். இதைத்தொடர்ந்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தங்கள் வீட்டில் முன்பு குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.