திருச்செந்தூர்: குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோயில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் திருக்கோயிலில் ஆண்டுதோறும் தசரா பண்டிகை மிக பிரம்மாண்டமாக கொண்டாடபடுகிறது. கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலை 2 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. பின்னர் 4 மணிக்கு யானை மீது கொடிபட்ட ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஆண்டு பக்தர்களின் கோரிக்கையை ஏற்று முதல் முறையாக பிரம்ம முகூர்த்தத்தில் கொடியேற்றப்பட்டது.