காரைக்குடி: ரூ.133 கோடி மோசடி – ‘நியூ ரைஸ் ஆலயம்’ இயக்குநர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைதுமாவட்ட நிர்வாகம் தகவல்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை தலைமையிடமாக கொண்டு ‘நியூ ரைஸ் ஆலயம்’ என்ற பெயரில் நிதி நிறுவனம் மற்றும் அதன் பல துணை நிறுவனங்கள் செயல்பட்டு வந்தன. முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என விளம்பரம் செய்து, பல ஆயிரம் முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ.133 கோடி மோசடி செய்தது. இதுகுறித்து, 2022-ம் ஆண்டு பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் 49 பேருக்கு எதிராக வழக்கு பதிவு செய்தனர்.